ன்றையநாளில் ஜாதகப் பலன்கேட்க ஜோதிடர்களிடம் செல்லும் பலரும் தங்கள் ஆயுள்பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.

வேத ஜோதிடத்தில் ரிஷிகள் ஒவ்வொருவரும் அவரவர் ஆய்வு, அனுபவங்களைக்கொண்டு, பலவிதமான முறையில் கிரகப் பலன் களை சுருதிகளாக ஓலையில் எழுதி வைத்தனர். ஆனால் சப்தரிஷிகள், இந்த பூமியில் தீர்க்காயுளுடன் வாழ்பவர்களின் கிரக அமைப்பு நிலையை எளிமையான முறையில் கூறியுள்ளார்கள்.

Advertisment

ss

ஜென்ம லக்னாதிபதி, 8, 10-ஆமிடத்து அதிபதிகள் என இந்த மூன்றும் லக்னத் திற்கு திரிகோண ராசிகளான 1, 5, 9-ஆவது ராசிகளிலோ அல்லது 1, 4, 7, 10 என்னும் கேந்திர ராசிகளிலோ அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தீர்க்காயுளுடன் வாழ்வார்.

ஜென்ம லக்னத்திற்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சுபகிரகங்கள் இருந்து, அவை லக்னாதிபதியைப் பார்த்தால், இந்த ஜாதகர் பூலோகத்தில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 1, 5, 9-ஆம் ராசிகள் லக்னாதி பதிக்கு நட்பு ராசிகளாக இருந்து, இந்த ராசிகளில் ஏதாவதொன்றில் லக்னாதிபதி இருக்க, லக்னாதிபதியை சுபகிரகங்கள் பார்த் தாலும் அல்லது அதனுடன் ஒரே ராசியில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு.

ஜென்ம லக்னாதி பதி திரிகோண ராசிகளிலோ அல்லது கேந்திர ஸ்தானங்களிலோ பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் தீர்க்காயுளுடன் நீண்டகாலம் வாழ்வார்.

ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி பலம்பெற்று, 1, 5, 9, 4, 7, 10-ஆவது ராசிகளில் சுபகிகங்கள் இருந்து, லக்னத் திற்கு 6, 8, 12-ஆவது ராசிகளில் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

Advertisment

லக்னாதிபதியும் 8-ஆமிடத்து அதிபதியும் ராசியில் இருந்தால், அவர் தீர்க்காயுள் உள்ளவர்.

ஜென்ம லக்னத்திற்கு 3, 5-க்குடைய கிரகங்கள் சேர்ந்து ஒரே ராசியில் இருந் தால், அவருக்குப் பிறக்கும் குழந்தை தீர்க்கா யுளுடன் நீண்டநாள் பூமியில் வாழ்வான்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம், சந்திரன், சனி ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே ராசியில் இருந்தால், ஜாதகரின் இரண்டாவது மனைவிக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 2, 5-ஆவது ராசிக்களுக்குரிய கிரகங்களும் ஒரே ராசியில் இருந்தால் புத்திர பாக்கியமுண்டு.

ஜென்ம லக்னத்திற்கு 3, 5-ஆமிட அதிபதிகள் ஒரே ராசியில் இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல அதிர்ஷ்ட யோகமுள்ள புத்திரன் பிறந்து, உலகில் செல்வந்த னாக தீர்க்காயுருடன் வாழ்வான்.

செல்: 93847 66742